பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் ரன்வீர் சிங்.
மும்பை பாந்த்ரா பகுதியில் நேற்று தனது சொகுசுக் காரில் சென்று கொண்டிருக்கும் போது, அவரது காருக்குப் பின்னால் அதிவேகத்துடன் ஒரு மோட்டார் பைக் வந்து கொண்டிருந்தது. வேகமாக முன்னேறிய அந்த பைக் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து ரன்வீர் சிங்கின் காரில் பலமாக உராய்ந்தது. எனினும் பைக்கில் வந்த இளைஞர் நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டார்.
இதில் ரன்வீர் காரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் ரன்வீர் சிங்குக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.


அங்கிருந்த சிலர் மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.