முக்கிய சந்திப்புகளில் பாலியல் குற்றவாளிகளின் போட்டோக்கள்..

உத்தரப்பிரதேச மாநில முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத், மாநிலத்தில் பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

’’பாலியல் குற்றவாளிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக குற்றம் இழைப்போரின் புகைப்படங்களைச் சுவரொட்டிகளில் அச்சிட்டு, மாநிலத்தில் முக்கிய சந்திப்புகளில் மற்றவர்கள் பார்க்கும் படி ,வைக்க வேண்டும்’’ என்று யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டார்.

’’போஸ்டர்கள் ஒட்டி ,பாலியல் குற்றவாளிகளை அடையாளப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் ‘’ என்று அந்த கூட்டத்தில் அவர் கூறினார்.

’’பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் இழைப்போரைப் பெண் போலீஸ் அதிகாரிகளே  தண்டிக்க வேண்டும்’’ என ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் ’’மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தால், அந்தந்த ஏரியா காவல்துறை இன்ஸ்பெக்டர்களே, அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்’’ என்று  எச்சரித்தார்.

-பா.பாரதி.