சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளம் பெண்! வழக்கு தொடுப்பதில் போலீஸுக்கு குழப்பம்!

கான்பூர்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளம்பெண் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடுப்பது என்று காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் பித்னு பகுதியில் குல்ஹவ்லி என்ற  சிறு கிராமம் உள்ளது. இங்கு  வசிக்கும் 16 வயது இளம் பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு மிட்டாய் தருவதாகக் கூறி, தனது வீட்டுக்குள் அழைத்து வந்திருக்கிறார். பிறகு,  அந்த சிறுவனிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறார்.

a

சிறுவன் பயந்துபோய் மறுக்க, அந்த இளம்பெண், தொடர்ந்து செக்ஸ் வைத்துக்கொள்ள வற்புறுத்தியிருக்கிறார்.  இந்த பலாத்காரத்தில்  சிறுவனின் மர்ம உறுப்பில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருக்கிறது.

அலறிய சிறுவன் தப்பித்து தனது வீட்டுக்கு ஓடிவந்துவிட்டான். தனக்கு நேர்ந்ததை அவன், தனது பெற்றோரிடம் தெரிவிக்க, உடனடியாக  கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

பாதிக்கப்பட்ட சிறுவன் மட்டுமின்ற், அந்த இளம்பெண்ணும் மைனர். ஆகவே அந்த பெண் மீது  எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடுப்பது என்பது குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

அதே நேரம், “ குழந்தைகள் பாலியல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அன்த பெண் மீது வழக்கு தொடரலாம்”  என்று சில வழக்கறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.