நடிகை குஷ்புவுக்கு போனில் பலாத்கார மிரட்டல்.. போலீசில் புகார் அளித்தார்..

டிகை குஷ்பு திரைப் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு டிவி சீரியல், பட தயாரிப் பிலும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை தொடர்பாளராக அவர் இருக்கிறார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அரசியல் ரீதியாக மத்தியில் ஆளும் மோடி அரசின் நடவடிக் கைகள் பற்றி தனது கருத்துகளை பகிரங்கமாக தெரிவித்து வருகிறார் குஷ்பு.


இந்நிலையில் குஷ்புவுக்கு ஒருவர் செல்போனில் அழைத்து பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்தி ருக்கிறார். இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் தகவல் கூறியிருக்கும் குஷ்பு,’ எனக்கு மிரட்டல் விடுத்த வர் சஞ்சய் சர்மா என்ற நபர் என விசாரித்தபோது தெரிந்தது. கொல்கத்தாவிலிருந்து இந்த கால் வந்தி ருக்கிறது. அவரது செல் நெம்பரும் கிடைத்திருக் கிறது. அதையும் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட் டிருக்கிறேன். மேலும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கொல்கத்தா போலீசுக்கு புகாரும் அனுப்பி இருக்கிறேன்’ என்றார்,
குஷ்புவுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் வந்தது ரசிகர்கள், திரையுலகினர். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.