வேலை கேட்டுச்சென்ற பெண்ணை கடத்தி 40 பேர் பாலியல் வன்கொடுமை: அரியானாவில் கொடூரம்

சண்டிகர்:

வேலைக்கேட்டு விடுதிக்கு சென்ற 22 வயது இளம்பெண்ணை 4 நாட்கள் அடைத்து வைத்து 40 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அரியானாவில் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஒருசிலரை கைது செய்துள்னர்.

அரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியை சேர்நத்  22 வயது திருமணமான இளம்பெண் ஒருவர் வேலை தேடி சென்றுள்ளார். அவருக்கு வேலை தருவதாக உறுதி அளித்த அவரது கணவரின் நண்பர்,  அந்த பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச்சென்று,  அறைக்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருடன் மேலும் பலர் சேர்ந்து இந்த கொடூர செயலை செய்துள்ளனர்.  இந்த வன்செயலில் மொத்தம் 40 பேர் ஈடுபட்டதாகவும், 4 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த இளம்பெண் காவல்துறையில் புகார் கூறி உள்ளார்.

அரியானாவின் மோர்னி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 15ந்தேதி முதல் 18ந்தேதி வரை 4 நாட்கள் தான் 40 பேரால் பாலியல பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், இதில் ஒருவர், தனது கணவருக்கு தெரிந்த நபர் என்றும், அவர்தான் எனக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்து அங்கு வரச்சொன்னார் என்றும் கூறி உள்ளார்.

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விடுதிப் பணியாளர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.