பாஜகவுக்கு எதிரான வலுவான ஆயுதம் ரபேல் ஊழல் : ராகுல் காந்தி.

டில்லி

பாஜக வுக்கு எதிரான முக்கிய ஆயுதம் ரபேல் ஊழல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்றதில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் அடிக்கடி சந்திப்பு நிகழ்த்தி வருகிறார்.   வரும் 2019 பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி பெரிதும் முயன்று வருகிறது.   இதற்கான முக்கிய திட்டங்கள் குறித்து மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று ராகுல் காந்தி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட ஒரு தலைவர், “காங்கிரஸ் தொண்டர்கள் மோடி அரசின் ஊழல்களை அனைத்து தரப்பினருடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.    இந்த ஊழல்களுக்கு முக்கிய எடுத்துக்காட்டு ரபேல் ஊழல்.   அரசுக்கு ரூ.40000 கோடி இழப்பை ஏற்படுத்தி ஒரு தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி லாபத்தை மோடி அரசு அளித்துள்ளது.

எனவே காங்கிரஸ் கட்சியின் கமிட்டி உறுப்பினர்கள், பொதுச் செயலாளர்கள், கட்சி பொறுப்பாளர்கள், செயளாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற விசாரணைக் குழு அமைக்க போராட்டம் நடத்த வேண்டும்.    அரசுக்கு இந்த விவகாரத்தில் கட்சி அழுத்தம் அளிக்க வேண்டும்.

ரபேல் ஊழல் என்பது கட்சிக்கு கிடைத்துள்ள வலுவான ஆயுதம் ஆகும்.  இதை பயன்படுத்தி ஊழல் மிகுந்த பாஜக அரசை விரட்ட தொண்டர்கள் உழைக்க வேண்டும்.    அத்துடன் மாநிலங்களில் உள்ள வாக்காளர்களை பாதிக்கும் விவகாரங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண தேவையான போராட்டங்களை காங்கிரஸ் நடத்த வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்” என கூறி உள்ளார்.