சீனாவில் இருந்து ரேப்பிட் டெஸ்டிங் கிட் ஏப்ரல் 15ம் தேதிதான் வரும்! – ஐ.சி.எம்.ஆர் தகவல்

டெல்லி:

சீனாவில் இருந்து அனுப்பப்படும் கொரோனா ரேப்பிட் டெஸ்டிங் கிட் ஏப்ரல் 15ம் தேதிதான் இந்தியா வரும் என்று  ஐ.சி.எம்.ஆர் தெரிவித்து உள்ளது.

கொரோனா நோயை விரைவாக கண்டறிய உதவும் ரேப்பிட் டெஸ்டிங் கிட் கடந்த வாரமே தமிழகத்திற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகஅரசு தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில்,  வருகிற 15ம் தேதிதான் ரேப்பிட் டெஸ்டிங் கிட் இந்தியாவுக்கு வரும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  ரேப்பிட் டெஸ்டிங் கிட் குறித்து பேச்சு வைரலாகி வந்தது. ஆளும் கட்சி  இன்று இரவு வருகிறது என்றது, பின்னர் அமெரிக்காவுக்கு சென்று விட்டது என்று பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், நாளை (15ந்தேதி)தான் இந்தியாவுக்கு வரும் என்று தெரிவித்து உள்ளது.

Rapid test kit  மூலம் ஒருவருக்கு ரத்தப் பரிசோதனையின் முடிவு 20-30 நிமிடங்களில் கிடைத்தது விடும். இதனால் விரைவில் கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.