இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பழிக்குபழியாக நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் இரு குடும்பத்தை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டோபா டெக் சிங் மாவட்டம் பிர் மகாலில் கடந்த 20ம் தேதி ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு ஆண் குற்றம்சாட்டப்பட்டார். இதையடுத்து அந்த ஆணின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை அணுகி மன்னிப்பு கோரவும், சமரசம் செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பாலியல் பலாத்காரம் செய்த நபரை மன்னிக்க முடிவு செய்தனர். இதற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டது. பெண்ணின் சகோதரர் சம்மந்தப்பட்ட ஆணின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை தான் அது. இந்த நிபந்தனைக்கு இரு கு டும்பத்தை சேர்ந்த 12 பேரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 21ம் தேதி ஆணின் சகோதரியுடன் பெண்ணின் சகோதரர் பாலியல் உறவில் ஈடுபட்டார். இதைதொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இரு வீட்டாரும் கையெழுத்திட்ட ஆவணம் போலீசாரிடம் வழங்கப்பட்டது. அப்போது சமரசத்திற்கான காரணம் போலீஸ் அதிகாரிக்கு தெரியவந்துது. இதையடுத்து பிர் மகால் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் இரு குடும்பத்தாரையும் உயர் அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றார்.

4 பெண்கள் உள்பட 12 பேரும் ஆஜராகியிருந்தனர். இதில் ஒரு பெண் 2வது பாலியல் பலாத்காரத்தில் பாதித்தவர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் பாகிஸ்தான் தெற்கு நகரமான முல்தானில் பழிக்குபழியாக 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கிராம குழுவினர் உத்தரவிட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.