துபாய்

க்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் காலிபா பின் ஜாயேத் அல் நக்யான் மற்ற ஷேக்குகளுக்கு ரம்ஜான் வாழ்த்துசொல்லும் படம் வெளியாகி உள்ளது.

அரபு நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய அரபு அமீரகம் துபாய் நகரை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இதன் தலைவர் ஷேக் காலிபா பின் ஜாயேத் அல் நக்யான் ஆவார். இவர் அபுதாபியிலுல்ள அல் பதீன் அரண்மனையில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 71 ஆகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 அன்று இவருக்கு பக்கவாதத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஒரு அவசர அறுவை சிகிசை நடந்தப்பட்டது. அதன் பிறகு அவர் வெளி உலகுக்கு வருவதை தவிர்த்து வந்தார். முக்கிய பொறுப்புக்களை அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் ஜாவேத் அல் நக்யான் நிர்வகித்து வருகிறார்.

நேற்று அரசின் ஊடகமான வாம் நியூஸ் ஏஜன்சி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் அமீரகத் தலைவர் ஷேக் காலிபா அரபு நாட்டு பாரம்பரிய உடையுடன் காணப்படுகிறார், அவர் ரம்ஜானை முன்னிட்டு மற்ற அரபு நாட்டு ஷேக்குகளுக்கும் மக்களுக்கும் இளவரசர் மூலம் வாழ்த்து சொல்வதாக அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.