சுவிட்சர்லாந்து: இளஞ்சிவப்பு வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம்!!

--

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் ரூ.370 கோடிக்கு ஏலம் போனது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது. இதை கிறிஸ்டி ஏல மையம் நடத்தியது. 10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் ரூ.370 கோடிக்கு (50 மில்லியன் டாலர்) ஏலத்தில் எடுக்கப்பட்டது. இந்த வைரக்கல் நீள் சதுரவடிவமும், பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது.

redpink

இந்த வைரத்தை பலர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர். முடிவில் ஒருவர் அதிக விலை கொடுத்து வாங்கினார். அவரின் பெயரை வெளியிட கிறிஸ்டி ஏல மையம் மறுத்து விட்டது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1920-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் இருந்து இந்த வைரக்கல் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிப்பது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

You may have missed