கேரளா : வெள்ளத்துக்கு பின் வித விதமான மீன்கள்

திருவனந்தபுரம்

கேரள வெள்ளத்துக்கு பிறகு பல புதிய வகை மீன்கள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கேரளாவில் கன மழை காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் மூழ்கியது.   இதனால் பலர் வீடிழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.   தற்போது மழை முழுவதுமாக நின்று விட்டபடியால் நிவாரணப் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.   அதே நேரத்தில் இயற்கையில் பல மாறுதல்களும் ஏற்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் மூலம் பரவும் தகவல்களினால் பல இடங்களில் அரிய வகை மீன்கள் நீர் நிலைகளில் உள்ளது தெரிய வந்துள்ளது.   ஒவ்வொரு வருடமும் மே மாதம் மீன்களின் கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.   தற்போது இந்த வாட்ஸ்அப் தகவல்களை ஒட்டி விஞ்ஞானிகள் மீன்களின் கணக்கெடுப்பை நடத்தி உள்ளனர்.   அப்போது பல வகை அரிய மீன்கள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

பல வெளிநாட்டு வகை மீன்கள் அதிக எடையுடன் காணப்பட்டது ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது.   மீன் பிடிக்க சென்றவர்களுக்கு தினம் 700 கிலோ அளவில் மீன்கள் கிடைத்துள்ளன.   அத்துடன் ஆப்பிரிக்க மீன் வகைகளும் அமேசான் ஏரிகளில் உள்ள மீன் வகைகளும் காணப்பட்டுள்ளன.   இது கேரள மாநிலத்தின் சுற்றுச் சூழலை பாதிக்கும் என்னும் அதிர்ச்சி தகவலை வின்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இவ்வகை மீன்களால் மண்புழுக்கள் அழிந்து விளைநிலங்கள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.   அதனால் முன்பு இவ்வகை மீன்களுக்கு அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது.    எனவே இவ்வகை மீன்களை ஒரு சிலர் சட்டவிரோதமாக வளர்த்து வந்துள்ளதாகவும் வெள்ளத்தில் அவை அடித்து வரப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகல் கருத்து தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rare species of fish found in Kerala after flood
-=-