‘அருவா’ படத்தில் சூர்யாவுடன் இணையும் ராஷி கண்ணா…..!

--

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா ஊரடங்கினால் ராஷி கண்ணா தனது ரசிகர் ஒருவரிடம் அவர் கேட்ட “உங்களுடைய அடுத்த படங்கள்” கேள்விக்கு பதிலளிக்கையில்..

“தமிழில் ‘அரண்மனை 3’ மற்றும் சூர்யா சார் – ஹரி சார் இணையும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் இரண்டு படங்கள் இருக்கிறது. அவை கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் தான் என்ன நிலைமை என்பது தெரியவரும். அதற்குப் பிறகுச் சொல்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் ‘அருவா’ படத்தில் அவர் நாயகியாக நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.