தோனியை போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த ரஷித் கான் – மெய்சிலிர்த்த ரசிகர்கள்

தோனியின் தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் அடித்து ரஷித் கான் பந்தை பறக்கவிட்டது ரசிகர்களை கவர்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பங்கேற்று விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணி பாக்தூன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது, இதில் மாரத்தா அரேபியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியின் 9வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பந்தை சிக்சருக்கு பறக்க விட்டார்.

helicopter

ரஷித் கான் அடித்த அந்த ஹெலிகப்டர் ஷாட் அப்படியே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் போன்றே இருந்தது. தோனியை போன்று ரஷித் கான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் இந்தியாவின் சேவாக் உள்ளிட்ட முன்னணி வீரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி மைதனத்தில் ரஷித் கான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டால் ரசிகர்கள் மெய்சிலிர்த்தனர். இந்த போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணி நிர்ணயித்த 10 ஓவருக்கு 125 ரன்கள் என்ற இலக்கை கொண்டு விளையாடிய பாக்தூன்ஸ் அணி 9.2 ஓவர்களில் வெற்றி அடைந்தது.

இதற்கிடையில், அனைவரது பாராட்டையும் பெற்ற ரஷித் கான் “ ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்தவர் எம்எஸ் டோனி தான் “ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.