தடகள வீராங்கனையாக ராஷ்மி ராக்கெட்டில் கலக்கும் டாப்ஸி….!

தடகள வீராங்கனையாக தான் நடிக்கும் ராஷ்மி ராக்கெட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை டாப்ஸி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இக்கதையை எழுதியவர் இயக்குநர் நந்தா பெரியசாமி. இக்கதையைத் தான் படமாக எடுக்க பிரபல பாலிவுட் இயக்குநர் ஆகாஷ் குரானா (Akarsh Khurana) முன்வந்துள்ளார். இக்கதை தற்போது பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகிறது.

இப்படத்தை தயாரித்து வருவது ஆர்.எஸ்.வி.பி தயாரிப்பு நிறுவனம் இது யூடிவி தயாரிப்பு நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இப்படத்தை இயக்கி வருவது பிரபலமான இயக்குனர் ஆகாஷ் குரானா என்பதால் இப்படம் பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.