விஜய் ஜோடியாகிறார் ராஷ்மிகா? முருகதாஸ் படத்தில் டபுள் ஹீரோயின்..

தளபதி விஜய்யின் 64வது படமான ’மாஸ்டர்’ முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. லோகேஷ் கனராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தை அடுத்து தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்துக்கு எஸ்.தமன் இசைமைக்கிறார்.

துப்பாக்கி 2ம் பாகமாக இப்படம் உருவாக உள்ளதாகவும் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் இரண்டாம் பாகத்திலுக் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று கூறப்பட்டது. தற்போது இப்படத்தில் ராஷ்மிகாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


கார்த்தி நடிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படம் மூலம் ஏற்கனவே ராஷ்மிகா தமிழில் அறிமுகமாகிறார். இதையடுத்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் ராஷ்மிகா நடிக்க உள்ளாராம். காஜல் அகர்வால் ஒரு கதாநாயகியாக நடிக்க மற்றொரு கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க உள்ளதால் இதில் விஜய் டபுள் ஆக்ஷன் வேடம் ஏற்கவும் வாய்ப்பிருப்பதாக தெரி கிறது. இது எல்லாமே உறுதி செய்யப்படாத தகவல்களாக உலா வருகின்றன.