ராஷ்மிகா வெளியிட்ட குழந்தை படம்.. யார் அந்த பாப்பா தெரியுமா?

--

ன்னட படத்தில் நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தன்னா தெலுங்கு படங் களில் நடிக்கத் தொடங்கினார். அது அவருக்கு பெரிய அளவில் கைகொடுத் தது. விஜயதேவர கொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் படங்கள் அவரை முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பெற வைத்திருக்கிறது. ஏற்கெனவே தமிழில் வந்த டியர் காம்ரேட் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் ராஷ்மிகா அறிமுகமாகியிருக்கிறார். தற்போது கார்த்தி ஜோடியாக ’சுல்தான்’ படம் மூலம் நேரடியாக தமிழில் அறிமுக மாக உள்ளார்.

 


கொரோனா ஊரடங்கால் பெங்களுருவில் உள்ள வீட்டில் இருக்கும் ராஷ்மிகா ரசிகர் களுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருக்கிறார். தனது திரையுலக பிரவேசம் அதில் வெற்றிபெற்ற ரகசியங் கள் போன்ற பல்வேறு விஷயங் களை பகிர்ந்து வருகிறார். தான் சிறுமியாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இப்படம் 2001ம் ஆண்டு பத்திரிகை ஒன்றின் அட்டை படத்தில் வெளியானது.