கேரளாவில் சர்ச் வடிவில் இருந்த சினிமா செட்டை இடித்து நொறுக்கிய ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர்….

--

கேரளா:

கேரளாவில் சர்ச் வடிவில் இருந்த சினிமா செட்டை ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர் இடித்து நொறுக்கியுள்ளனர்.

கேரளாவில் டோவினோ தாமஸ் நடித்த ‘மினால் முரளி’ படப்பிடிப்புக்காக சர்ச் வடிவிலான செட் ஒன்று சுமார் 80 லட்சம் போடப்பட்டிருந்தது. இந்த செட்டுக்கு ராஷ்டிரிய பாஜ் ரங் தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இந்த செட் கலாடி மகாதேவா கோயிலுக்கு முன்னால் இருப்பதாகக் கூறி இதை உடனடியாக அகற்ற வேண்டுமென்று அவர்கள் கூறியிருந்தனர். இதை தொடர்ந்தும் இந்த செட் அகற்றப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து நேரடியாக களத்தில் இறங்கிய ராஷ்டிரியா பஜ்ரங் தள் அமைப்பினர், அந்த படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்டை இடித்தது தள்ளினர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகியது.

You may have missed