வார ராசிபலன்: 9.4.2021  முதல் 15.4.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம்

ஹப்பாடா.. டென்ஷன்கள்.. மெல்ல.. படிப்படியாய்க் குறையும். தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே பொருளாதார நிலை உயரும் என்று நீங்க தைரியமா நம்பலாங்க. . தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். கணவன் – மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். சண்டைகளும் சஞ்சலங்களும் டாட்டா சொல்லிடும்.  செய்யும் முயற்சி களில் அவசரம் காட்ட வேணாங்க.  கொஞ்சம் பொறுமையாவே காலை எடுத்து வைங்க. எதையுமே ஆலோசித்து முடிவெடுப்பதே நல்லதுங்க. எது செய்வதானாலும் அனுபவம் வாய்ந்தவங்களின் ஆலோசனைகளைக் கேளுங்க. அல்லது உங்க ஜோசியரைக் கலந்தாலோசியுங்க. நல்லவங்களைப் பகைச்சுக்கிட்ட நிலை மாறி அவங்க அன்பைப் பெறுவீங்க. அவங்க வழிகாட்டல் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.. நல்ல வாய்ப்புகள் வந்து கதவை தட்ப்போகுதுங்க. அப்போதென்று பார்த்துத் தூங்கிடாதீங்க. ப்ளீஸ். வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி  அகலும்.

ரிஷபம்

பிலவ ஆண்டு துவக்கத்திலேயே உங்களுக்குத் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதையும் எதிர்கொண்டு ஜெயிக்கும் பலம் மனசுக்குக் கிடைக்குமுங்க. தொல்லை தந்தவங்க விலகுவாங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் உருவாகும். தந்தை வழி உறவில் இருந்த சண்டைகளும் சச்சரவுகளும் காணாமல் போயிடும்.. தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்குமுங்க.  மனக்குழப்பங்கள் அகலும். பிசினஸிலும் .. அலுவலகத்திலும் இருந்துக்கிட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தாராளமாகச் செலவிடும் வாய்ப்பு கைகூடுமளவுக்கு வருமானம் வருமுங்க.. பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து விலகியவங்களுக்கு மீண்டும் அதில் சேரக்கூடிய வாய்ப்பு கைகூடும். திருமண தடை அகலும். மம்மியின்  உடல் நலம் சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள்  “பை..பை” சொல்லி ஓடிவிடும். மகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடைபெறும்.

மிதுனம்

பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீங்க. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவாங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்குவீங்க. குடும்பத்துடன் விருந்து விசேஷங் களுக்குப்போய் வருவீங்க. உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்க ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வாங்க. அவர்கள் மத்தியில் உங்க கௌரவம் ஒரு படி உயரும். கொஞ்ச நாளாவே சின்னச் சின்ன இடர்கள் காரணமா முன்னேற்றம் முட்டுக்கட்டை போட்டு நின்னுக்கிட்டிருந்தது இல்லையா? இனி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்குமுங்க.

கடகம்

கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீங்க. தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ஸ்டூடன்ட்ஸ்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மார்க்ஸ் வாங்கி, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீங்க. ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லதுங்க. இந்த வாரத்திலிருந்து வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். வருமானம் உயரும். அலுவலகவாசிகளுக்குத் தாமதப்பட்ட பதவி உயர்வு தடையின்றி கிடைக்குமுங்க. பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு  அது பற்றிய தகவல் வரலாம். அரசாங்க ஆதரவும், வசதியான வாழ்க்கையும், வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவாகும். உங்க பிள்ளைங்களால் பிரச்சினை ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முறையாக நிறைவேற்றுவீங்க. வெரிகுட்.

சிம்மம்

நன்மையும், தீமையும் கலந்தேதானுங்க நடைபெறும். பிள்ளைங்க வழியில் கொஞ்சம் நஷ்டம் ஏற்படலாம். பிறருக்கு ஜாமீன் போட்டு வாங்கிக்குடுத்த தொகையால் பிரச்சினைகள் வரலாம். அதிலிருந்து சமாளிச்சு வெளியே வந்துடுவீங்க. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். கணவன் – மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைங்க ளால் பெருமை சேரும். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீங்க. பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்குமுங்க. திறமையைப் பார்த்து பதவி உயர்வு தானாக வந்து சேரும். ஒரு சிலர் சுயதொழில் செய்ய முன்வருவாங்க.. தாய்வழி ஆதரவு கிடைக்குமுங்க. தட்டிப் போன வாய்ப்புங்க எல்லாம் தானாக வந்து சேரும். புதிய வீடு வாங்கி அதுல குடியேறும் யோகம் உண்டுங்க. எதிரிகள் விலகுவர். கடன்சுமை குறையும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சியில வெற்றி கிடைக்குமுங்க. எந்தப் பிரச்னையிலும் சிக்காமல் கேர்ஃபுல்லா இருங்க.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 12 வரை 

கன்னி

போன வாரம் இருந்துக்கிட்டிருந்த மனக்குழப்பம் அகலும். பொருளாதார நிலை உயரும். வீடு மனை சம்பந்தமா இருந்துக்கிட்டிருந்த வழக்குகள் நல்லபடியா ஒரு முடிவுக்கு வருமுங்க. சொத்துகளில் இருந்த வில்லங்கங்களும், விவகாரங்களும் விலகும். கைமாறிய சொத்துகள் கூட அகெயின் உங்க கைகளுக்கு வந்து சேரும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உயர்வு கிடைக்குமுங்க. அதிகாரிகளின் ஆதரவு திருப்தி அளிக்கும். சுப விரயங்களை மேற்கொள்ளுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். உங்களுக்குத் தக்க சமயத்தில் ஃப்ரெண்ஸின் உதவி கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கொடுக்கல்-வாங்கலை ஒழுங்கு செய்து கொள்வீங்க. கணவன் – மனைவிக்குள் அன்பு மேலிடும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். சகோதரர்கள் உதவி செய்ய முன்வருவர். வாய்ப்புகள் கைநழுவிப் போகாம பார்த்துக்குங்க. அநாவசியப் பேச்சும் வாக்குவாதமும் வேணாமே. ப்ளீஸ்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 14 வரை 

துலாம்

பூர்வீக வீடுகளில் பாகப்பிரிவினை செய்துகொள்ள எடுத்த பஞ்சாயத்துகள் நல்ல முடிவுக்கு வருமுங்க. ஆன்மிகப் பணியை தொடர முன்வருவீங்க. நேர்முகத் தேர்விற்கு பலமுறை சென்றும் வேலை கிடைக்கவில்லையே. இந்த முறையாவது வேலை கிடைக்குமா, என்று நினைச்சவங்களுக்கு விரும்பியபடியே வேலை  கிடைக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் ஓடிவந்து ஒட்டிக்கொள்ள முன்வருவர். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். வீடு, இடம், வாங்கும் முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியத் தொல்லையில் இருந்து விடுபடுவீங்க. லேடீஸ்க்கு, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டுங்க. பயணங்கள் பலன்தரும் விதத்தில் அமையும். சுபநிகழ்ச்சி ஒன்று இல்லத்தில் நடைபெறலாம். கல்யாண முயற்சிகள் கைகூடும். சந்தர்ப்பங்கள் அனைத்தும் சாதகமாக அமையும். கருத்து வேறுபாடுகள் யாருடனும் வராமல் பார்த்துக்குங்க. ப்ளீஸ்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 17 வரை 

விருச்சிகம்

கொடுக்கல் வாங்கல்களில் ஒருசிலர் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்களால் லைட்டா தொல்லைங்க ஏற்படும். வாங்கிய கடனைக்கொடுக்க ஏதேனும் ஒரு சொத்து விற்கும் சூழ்நிலை ஒரு வேளை ஏற்பட்டாலும் ஏற்படுமுங்க. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீங்க. அது அவசியமா-. அநாவசியமா என்று நல்லா திங்க் பண்ணிட்டு வாங்குங்க. வீடு மாற்றம், அல்லது ஊர் மாற்றம்  அல்லது நாடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். கூட்டாளிகள் கூடுதல் லாபம் தருவதாகச் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். சேமிப்புகள் கரைகின்றதே என்று கவலைப்படுவீங்க. மறைமுகப் பகை தீர்ந்துவிடும். எதையும் வெளிப்படையாய்ப் பேசும்போது, மனசுக்குள்ளேயே வைத்துக்கொள்வது நல்லதுங்க. வாரத்தின் இரண்டாம் பாதியில் பண வரவு வரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு

குடும்ப முன்னேற்றம் கூடுதலாயிருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். சென்ற வாரம் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். தாய் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு உண்டுங்க. தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. லேடீஸ் புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களாக இருந்தால் உயர்பதவிகள் தானாகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்க எடுத்த முயற்சிங்க வெற்றி தரும். திருமணமாகி குழந்தைப்பேறு எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களுக்கு மக்கட்பேறு கிடைக்கும் வாய்ப்பு உண்டுங்க. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். குரு வழிபாடும் கிரக வழிபாடும் உங்க எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். குடும்பத்தில் அரை குறையாக நின்னுபோன காரியங்கள் நிறைவேறும்.

மகரம்

குடும்பப் பிரச்சினை, ஒரு வழியாக நல்ல முடிவிற்கு வருமுங்க. கடன்கள் படிப்படியாக குறையும். சுப காரியங்களுக்காக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உற்றார், உறவினர்கள் உங்களுக்குச் சாதகமாக நடந்துக்குவாங்க. முக்கியப் புள்ளிகள், உங்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பாங்க.  செல்வாக்கு உயரும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டுங்க. மூத்த சகோதரர்களால் முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டுங்க. உடன்பிறப்புகளின் இல்லத்து சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீங்க. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் காலம் இது. உங்க திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். சக பணியாளர்களுடன் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டு யோகம் கூட ஒரு சிலருக்கு கிடைக்கலாம்.

கும்பம்

ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை காட்டணுங்க. முன்பைவிட இப்பொழுது சில பிரச்சினைகள் காணாமல் போயிருக்கும். சின்னச் சின்னக் கவலை அகல, வழிபாட்டை முறையாக மேற்கொள்ளுங்க. திடீர் திடீர்னு மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துகிட்டே இருக்கும். குடும்ப பிரச்சினைகளைத்  தக்க சமயத்தில் சமாளிப்பது நல்லது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை ஏற்பட, விட்டு கொடுத்துப் போகணுங்க. குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேணாங்க.  உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். பிள்ளைகளை உங்களின் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. ஆபரண சேர்க்கை உண்டுங்க. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறப்புகள் உறுதுணைபுரிவர். தொழில் வளர்ச்சி மேலோங்கும். லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாய்க் கிடைக்கும். சிந்தித்துச் செயல்பட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வேலை நிமித்தமாக ஃபாரின் செல்லக்கூடிய வாய்ப்பு உருவாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்

உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீங்க. சிலருக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிஞ்சு போவாங்க. அவங்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டுங்க. ஆனால், சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். அலுவலகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படுவதால், மனதில் சோர்வும், உடல் அசதியும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது எதிர்காலத்துக்கு நல்லதுங்க. சிலருக்கு திடீர் இடமாற்றம், பணிமாற்றம் ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது.