திருப்பதி மலையில் ரத சப்தமி விசேஷம்

7 வாகனங்களில் பவனி  வரும்  ஏழுமலையான்

திருப்பதி ஏழு மலையான் கோவிலில் ரதசப்தமி விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். இங்கு ஏழு மலைகள் இருப்பதால் ஏழு குதிரைகள் போல் நினைத்து இங்கு ரதசப்தமி கொண்டாடப்படுகிறது.

திருமலையில் காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரை ஏழு வாகனங்களில் மலையப்பன் வலம் வருவார். பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையான் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் தான் வலம் வருவார்.

ரத சப்தமியன்று ஒரே நேரத்தில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருவது அர்த்த பிரம்மோற்சவம் என்பார்கள்.

வாயு புத்திரனான அனுமன் சூரியனிடம் இருந்தே கல்வி கற்றான் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.