டிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க நிர்வாகிகளாக சரத் குமார் , ராதாரவி உள்ளிடோர்  பொறுப்பு வகித்தனர்.  பிறகு  நடைபெற்ற தேர்தலில் பஞ்சபாண்டவர் எனப்பட்ட  விஷால் தலைமையிலான அணியினர் போட்டியிட்டு வென்றனர்.

சரத் - ராதாரவி - வாகை சந்திரசேகர்
சரத் – ராதாரவி – வாகை சந்திரசேகர்

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாகிகள், நடிகர் சங்க பணத்தை சரத், ராதாரவி உள்ளிட்ட நிர்வாகிகள்  கையாடல் செய்ததாக கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.  பின்னர் செயற்குழு கூட்டத்தில் அவர்களை இடை நீக்கம் செய்வதாக அறிவித்தனர்.
இந்த நிலையில்  இன்று பொதுக்குழு கூடியது. சில உறுப்பினர்கள், தங்களை கூட்டத்துக்கு அனுமதிக்கவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர். நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில் கூடிய பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   இதற்கிடையே  நடிர்கள் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கும் தீர்மானத்தை பொதுச்செயலாளர் விஷால் கொண்டுவந்தார். இதை பொதுக்குழு ஏகமனதாக ஏற்றது.
இதையடுத்து இம்மூவரும் நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.