முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை’! கமல் டுவிட்

சென்னை,

டந்த சில நாட்களாக நடிகர் கமலஹாசனின் அரசுக்கு எதிரான டுவிட்டுகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது,  முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை’ என்று டுவிட் செய்துள்ளார்.

சமீப காலமாக அரசுக்கு எதிரான கருத்துக்களை  டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.  தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழல் குறித்து, அமைச்சர்களின் இ.மெயில் முகவரிக்கு தகவல்களை அனுப்ப ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழகஅமைச்சர்களின் இ.மெயில், போன் நம்பர் போன்ற தகவல்கள், அரசின் வெப் சைட்டிலிருந்து உடனடியாக அகற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்தவாரம், பதிவிட்ட டுவிட்டரில்  “புரட்சியாளர்கள் தோல்வியையும் சாவையும் கண்டு பயப்படமாட்டார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று முன்தினம்,  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி களில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கியதை தடுத்து நிறுத்திய தனது நற்பணி இயக்கத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து,  தற்போது மீண்டும் ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் நீர் சொன்னீர் வழிமொழிகிறேன். முந்திச்சொல்வதை விட, முன்னேற்றத்தின்பின் செல்வதே பெருமை. பின்பற்றுவோர் தொண்டரல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா?  என குறிப்பிட்டுள்ளார்.