தட்டுத்தடுமாறிப்போய் இருந்தேன்: எடப்பாடியை சந்தித்த ரத்தினசபாபதி எம்எல்ஏ

சென்னை:

டுமாறிப்போய் இருந்தேன், தற்போது அமைச்சர் விஜயபாஸ் மூலம் சரியான நிலைக்கு வந்துள்ளேன் என்று, அதிமுக அதிருப்தி எம்எல்ஏ ரத்தினசபாபதி கூறினார்.

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த  கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைசெல்வன் , அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி ஆகியோர் தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தனர். அவர்கள் மீது கட்சித்தாவர் தடை சட்டப்படி , விளக்கம் கேட்டு  சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு 3 எம்.எல். ஏக்களும் உச்ச நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்று வந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் சென்று , முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார். அதைத்தொடர்ந்து ரத்தினசபாபதி, சபாநாயகரை சந்தித்தும் பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரத்தினசபாபதி, தட்டுத்தடுமாறிப்போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரைத்தான் சேரும்; மீண்டும் அதிமுக எம்எல்ஏவாக செயல்படுவேன் என்று கூறினார்.

அமமுகவை பற்றி நான் இப்போது விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

இவர்தான், தனது எம்எல்ஏ பதவியை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தால், அவரது கையை வெட்டுவேன் என்று வீர வசனம் பேசியது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி