கமல் – ஷங்கர் கூட்டணியில் மீண்டும் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கப்பட்டது .ஆனால் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் ‘இந்தியன் 2’ பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ப்ரல் 2021-ல் வெளியிடலாம் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு இணைந்துள்ளார். இதனை படக்குழு அறிவித்துள்ளது.