சென்னை,

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டுக்கு 1 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு ரேஷனின் மானியம் தரப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்  தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் சமையல் காஸ் விலை மானியம் அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

அதைத்தொடர்ந்து ரேஷனில் வழங்கப்படும் மானிய விலையிலான பொருட்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. அதற்கான விதிகள் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகளில், வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்பவர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், ஆண்டிற்கு 1 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள், 3 அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு உள்ளவர்கள், சொந்த பயன்பாட்டுக்கு கார் வைத்திருப்பவர்கள் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த விதிகளின்படி பார்த்தோமானால் 90 சதவிகித மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க இயலாத சூழ்நிலை உருவாகி விடும்.

இந்நிலையில், உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது என்றும், மேலும்  குடும்ப அட்டைகளை நீக்குவதற்கான அடிப்படை விதிகள்  தமிழகத்திற்கு பொருந்தாது’ என்று காமெடி செய்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மத்திய அரசின் உதான் திட்டம், ரேஷன் ரத்து திட்டம், ஜிஎஸ்டி போன்ற  வெகுஜன விரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்காமல் தவிர்த்து வந்த நிலையில்,

அவர் மறைந்ததும், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் பொம்மையாக தலையாட்டிவிட்டு, அனைத்து ஷரத்துக்களிலும் கையெழுத்திட்டுவிட்டு இன்று மக்களை ஏமாற்ற, மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று அமைச்சர் காமராஜ் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….