Random image

3மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் ரேஷன் கார்டு ரத்து கிடையாது: அமைச்சர் காமராஜ்

சென்னை:

ட்டசபையில் இன்றைய கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது, ரேஷன் கார்டு குறித்த கேள்விக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜர் பதில் அளித்தார்.

அப்போது, ரேசன் கார்டுகளை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டாலும் ரத்து செய்யப்பட மாட்டாது என்று  தெரிவித்தார்.

சமீபத்தில்,  ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் தவிர்த்து வந்தால், அவர்களது ரேஷன் கார்டுகளை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  தமிழக சட்டமன்றத்தில், திமுக உறுப்பினரும், சைதை தொகுதி எம்.எல்ஏவு மான   மா சுப்பிரமணியன் எழுப்பிய கேள்விக்கு, தமிழக அமைச்சர் காமராஜ் இந்த பதிலை அளித்தார்.

மேலும், மத்திய அமைச்சர் கூறியிருந்தது அறிவுரைதான் என்றும் கொள்கை முடிவு இல்லை என்று விளக்கிய காமராஜ்,  மத்திய அரசின் இந்த அறிவுரையை தமிழக அரசு பின்பற்றாது என்றும்  தெரிவித்தார்.

தொடர்ந்து  3 மாதங்கள் ரேசன் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும், பிறகு ரேசன் பொருட்கள் வாங்கலாம் என்றும், அவர்களுக்கு பொருட்கள்  வழங்கப்படும் என்றும், 3 அல்ல 5 மாதங்கள் ரேசன் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேசன் அட்டை ரத்து செய்யப்பட மாட்டாது என்று காமராஜ் தெரிவித்துள்ளார்.