‘முகக்கவசங்களுக்கும் ‘ரேஷன்’..  டாக்டர்கள் அதிர்ச்சி..

‘முகக்கவசங்களுக்கும் ‘ரேஷன்’..  டாக்டர்கள் அதிர்ச்சி..


கொரோனாவின்  பிடியில் இருந்து நோயாளிகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்போர், டாக்டர்கள், நர்சுகள், மற்றும் டெக்னீசியன்கள் ஆவர்.

உயிரைப் பணயம் வைத்து, சிகிச்சை அளிக்கும் இந்த, ஜீவன்களின்- குலை நடுங்கும் படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான மையம் என்று அழைக்கப்படும், ’எய்ம்ஸ்’.

என்ன உத்தரவு?

ரேஷன் முறையில் முகக்கவசங்கள் வழங்கப்படும் என்பதே அந்த உத்தரவு.

’’ 20 நாட்களுக்கு ஒரு முறை டாக்டர்கள், நர்சுகள், டெக்னீசியன்கள், காவலர்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா  5 முகக்கவசம் மட்டுமே  வழங்கப்படும். இவற்றில் தொற்று ஏற்படாது என்பதால் ஒரு முகக்கவசத்தை ஒருவர் குறைந்த பட்சம்  நான்கு முறை பயன் படுத்திக்கொள்ள வேண்டும்’ என்பதே அந்த உத்தரவு

இதனால் டாக்டர்கள் உள்ளிட்டோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

‘இந்த மாஸ்க்கை எப்படிப் பாதுகாப்பாக வைப்பது? வீட்டுக்குக் கொண்டு சென்றால், அங்கு இருப்பவர்களுக்குத் தொற்று ஏற்படுமே?’ என்று புலம்புகிறார்கள், மருத்துவ வர்க்கத்தினர்.

– ஏழுமலை வெங்கடேசன்