டில்லி,

ஜிஎஸ்டி அமல்படுத்த இருப்பதால் ரேஷன் பொருட்கள் விலை உயராது என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் நாளை மறுதினம் முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்த இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதன் காரணமாக ரேஷன் பொருட்களும் விலை உயர்த்தப்படலாம் என்றும் தகவல் பரவியது.

இதையடுத்து, ரேஷன் பொருட்களின் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ரேஷனில் வழங்கப்பட்டு வரும்  அரிசி மற்றும் கோதுமை விலை, ஓராண்டுக்கு பழைய விலையே தொடரும், தற்போது ரேஷன் பொருட்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என   மத்திய அமைச்சர் பஸ்வான் கூறியுள்ளார்.