ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 30 ஆயிரம் கடைகள் மூடப்படலாம்

சென்னை
ய்வூதியம், பணி வரன்முறி உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் அரசு நியயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் கூட்டுறவு சங்க கடைகள் இந்த பணியை செய்கின்றன. இந்த ரேஷன் கடைகளில் பணி புரிவோர் தற்போது 30 கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துள்ளனர்.

மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் எடையாளர்கள் பணி நியமனம், ஒய்வூதியம், பணி வரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடை பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 25000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொள்கின்றனர். அதனால் சுமார் 30000 ரேஷன் கடைகள் மூடப்படலாம் என தெரிய வந்துள்ளது.

இன்றும் நாளையும் மாவட்ட தலைநகர்களில் இந்த பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு பணி இல்லை எனில் ஊதியம் இல்லை (NO WORK NO PAY) என்னும் அடிபடையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.