தமிழில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் ஜிப்ரான் இசையமைப்பில் வெளியான படம் ‘ராட்சசன்’.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் தெலுங்கு ரீமேக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தி ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐ.எம்.டி.பி இணையத்தில் தமிழ்ப் படங்களில் அதிக புள்ளிகளைப் பெற்ற படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.

அதே போல் இந்தியப் படங்கள் வரிசையில், ‘ராட்சசன்’ படத்துக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

இந்தச் சாதனையால் படக்குழுவினர் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.