மாமியாரான கமல் பட நாயகி

 

வளர்ப்பு மகள்களுடன் ரவீணா (பழைய படம்)

ந்தியில் பிரபலாமாக விளங்கிய நடிகைகளில் ரவீனா டண்டனும் ஓருவர் ஆவார்.  இவர் பல இந்திப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர்.   தமிழில் இரு படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.  அர்ஜுன் நடித்த சாது என்னும் படத்தில் தமிழில் அறிமுகம் ஆகிய ரவீனா பிறகு ஆளவந்தான் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார்.   அந்தப் படம் பிரமாதமாக பேசப்பட்டாலும் வர்த்தக ரீதியாக தோல்வியுற்றதால் இவர் மேலும் தமிழ்ப்படங்களில் நடிக்கவில்லை.

இவர் நிஜ வாழ்க்கையில் வித்தியாசமான ஒரு பெண்.  திருமணத்துக்கு முன்பு இரு ஆதரவற்ற பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.   அதன் பின் திரைப்பட வினியோகஸ்தர் அனில் தடானியை திருமணம் செய்துக் கொண்டார்.  இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர்.   ஆனால் பாகுபாடின்றி நான்கு குழந்தைகளையும் ரவீனா வளர்த்து வந்தார்.

தற்போது இவர் தனது வளர்ப்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்து மாமியாராகி உள்ளார்.   அவர் இது குறித்து செய்தியாளர்களிடம், “நான் தத்து எடுக்க என் பெற்றோர்கள் தடை ஏதும் சொல்லவில்லை.  எனது திருமணத்துக்கு பாதிப்பு வராமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என மட்டுமே தெரிவித்தனர்.   நான் அவர்களை என் சொந்தக் குழந்தைகளாக ஏற்றுக் கொண்டது போல் என் கணவரும் அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.   என்னால் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எனது கணவரின் தொழிலிலும் பங்கு கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.” என ரவீனா கூறி உள்ளார்.