ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – இந்தியாவின் ரவிக்குமாருக்கு தங்கம்..!

புதுடெல்லி: ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் ரவிக்குமார் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

மேலும், சக இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ரவிக்குமார் 57 கிகி எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் தஜிகிஸ்தானின் வோஹிடோவை 10-0 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தினார். இவர் காலிறுதிப் போட்டியில் மங்ககோலிய வீரரையும், அரையிறுதியில் கஜகஸ்தான் வீரரையும் வீழத்தியிருந்தார்.

65 கிகி எடைப்பிரிவில், மற்றொரு இந்திய வீரர் பஜ்ரங் புனியா, ஜப்பானின் டகுடோவை எதிர்கொண்டார். ஆனால், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2-10 என்ற கணக்கில் போட்டியை இழந்து வெள்ளியைக் கைப்பற்றினார்.

இவர், தனது காலிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரையும், அரையிறுதியில் ஈரான் வீரரையும் வென்றிருந்தார்.