டி.வி.யில் ஆபாச பேச்சு: ரவி சாஸ்திரிக்கு சமூக வலைத்தளவாசிகள் கண்டனம்

ந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சாயாளரும் முன்னாள்  நட்சத்திர வீரருமான ரவிசாஸ்திரி, தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தையைப் பயன்படுத்தியதை அடுத்து அவருக்கு சமூகவலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவை இந்திய கிரிக்கெட்அணி வெற்றி கொண்டது. அடிலெய்ட்  நகரில் நடந்த இந்த டெஸ்ட் போட்டி கடைசி நேரத்தில் மிகுந்த பரபரப்புடன் முடிந்தது. இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று  நடந்தது.   தொலைக்காட்சி வர்ணனையாளர்களான சுனில் கவாஸ்கர், மார்க் புட்சர், மைக்கேல் கிளார்க் ஆகியோர் இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் அந்த போட்டியின் கடைசி பதற்றமான தருணங்கள் எப்படி இருந்தன என்று கேட்டனர்.  ரவிசாஸ்திரி தான் அப்போது மிகுந்த பதற்றத்துடன் இருந்ததை குறிப்பிடும் வகையில், இந்தி மொழியில் ஒரு ஆபாச வார்த்தைப் பயன்படுத்தினார்.

“நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம், சிறிது நேரத்துக்கு எங்கள்…” என்று அந்த ஆபாச வார்த்தையைக் குறிப்பிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடந்த சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி கூறியதை மொழி பெயர்க்க மறுத்து விட்டார்.

இந்த நிலையில் ஆபாச வார்த்தையைப் பயன்படுத்திய ரவிசாஸ்திரிக்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர், தற்போது பயிற்சியாளராக இருப்பவர் இப்படி தரம் தாழ்ந்து பேசலாமா என்று பலரும் பதிவிட்டுள்ளனர். அதே போலபர் ரவிசாஸ்திரியின் பேச்சை கிண்டலடித்து வருகிறார்கள்.

ஒருவர்,   ரவிசாஸ்திரி கூறிய அந்த வார்த்தையின் அர்த்தம் தொனிக்கும்படி..  ‘ரவிசாஸ்திரியின் முகம் ஏன் இப்படி வீங்கியிருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது’ என்று கேலி செய்துள்ளார்.

இன்னொருவர், ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தியர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் ரவிசாஸ்திரி அப்படி தெரிவித்தாரோ”  என்று கேலி செய்திருக்கிறார்.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்,  ரவிசாஸ்திரியின் ஆபாச வார்த்தையை பிரசுரிப்பதைத் தவிர்த்து,   ‘அவர் வாயில் இருந்ததாகக் கூறியது நிச்சயம் இருதயம் அல்ல’ என்று  கிண்டலாக பதிவிட்டுள்ளது.

அதே நேரம் சிலர் ரவிசாஸ்திரியின் “வெளிப்படைத்தன்மை பாராட்டுக்குரியது” என்றும் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சாஸ்திரி கருத்தது குறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் கேட்ட போது அவர் வாய்விட்டுச் சிரித்து விட்டார் என்று ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்திருக்கிறது.