சஞ்சய் மஞ்ரேக்கர் வர்ணனைக்கு ரவீந்திர ஜடேஜா கடும் தாக்கு

டில்லி

முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனைக்கு ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவரது வர்ணனைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருவது வழக்கமாக உள்ளது. கடந்த ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்கு ஆதரவாக இவர் வர்ணனைகள் இருந்தன. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை கடுமையாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பல நேரங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் தோனியின் விளையாட்டு குறித்து மோசமான வர்ணனை செய்து வந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தர்போது நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இங்கும் அவர் தனது மோசமான வர்ணனையை தொடர்ந்து வருகிறார்.

ரவீந்திர ஜடேஜா

தற்போது இந்திய அணி 8 ஆட்டங்களில் 7 ல் வெற்றி பெற்றுள்ளது. ஆயினும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியைப் பற்றி தனது வர்ணனையில் மிகவும் மோசமாக குறிப்பிட்டு வருகிறார். இதனால் கோபமடைந்த ரசிகர்கள் அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் உங்களை விட இரு மடங்கு அதிக போட்டியில் விளையாடி உள்ளேன். இன்னும் விளையாடி வருகிறேன். வெற்றி பெற்றவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். நான் ஏற்கனவே உங்கள் உளறல்களை தேவையான அளவு கேட்டுள்ளேன்” என கடுமையாக தாக்கி பதிந்துள்ளார்.

 

 

 

கார்ட்டூன் கேலரி