சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மனைவி மீது காவலர் கொடூர தாக்குதல்

ஜாம்நகர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை குஜராத் காவலர் கடுமையாக அடித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையடி வருகிறார்.  இவர் மனைவியின் பெயர் ரீவா.   இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகரில் வசித்து வருகிறார்.   நேற்று ஜாம் நகரில் உள்ள சாரு செக்‌ஷன் சாலையில் ரீவா தனது காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.  அப்போது அருகில் ஒரு காவலர் (கான்ஸ்டேபிள்) மோட்டார் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.

ரீவாவின் கார் அந்த பைக்கை உரசி உள்ளது.  அதனால் அந்த காவலர் சஜய் ஆஹிர் காரில் இருந்த ரீவாவை தலைமுடியை பிடித்து வெளியே இழுத்துள்ளார்.   அத்துடன் நடு சாலையிலேயே அவர் கன்னத்தில் பல முறை அறைந்துள்ளார்.   அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து ரீவாவை மீட்டுள்ளனர்.    காவலர் சஜய் ஆஹிர் கைது செய்யப்பட்டுள்ளார்.