மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக எம் பி ரவீந்திரநாத் குமார்

தேனி

க்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியிலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியிலும் போட்டியிட்டன. பாஜக வட மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்ற போதும் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை.

நேற்ற் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் வெற்றி பெற்று வந்தனர். பாஜக மற்றும் அதிமுக தொடர்ந்து பின்னடவில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகனான இவர் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஆவார்.