ராதிகாவின் மகள் ரயானேவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது …!

ராதிகாவிற்கு ரயானே என்ற மகள் உள்ளார். அவருக்கும் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவருக்கும் 2016ல் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 2018ல் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரயானேவுக்கு இரு நாட்கள் முன்பு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதை அவர் தனது இன்ஸ்டாகிராமில் மகள் பிறந்தது பற்றி மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். “நாங்கள் இப்போது 4 பேர். எங்கள் பாஸ் லேடி வந்துவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்

இதற்கு பிக் பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் .