எம். ஆர். ராதா பற்றி ராதிகா சரத்குமாரின் மகள் ரயன் உருக்கமான ட்வீட்….!

நடிகவேல் எம்.ஆர். ராதாவின் பிறந்தநாளான நேற்று ராதிகா சரத்குமார் ட்வீட் போட்டிருந்தார்.

ராக்ஸ்டாரின் பிறந்தநாள். கொள்கைகளுடன் வாழ்ந்தவர். வழக்கறிஞர் கொடுத்த ரிப்போர்ட்டை வாசித்தபோது அவரை நீதிமன்றத்தில் பொய் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அவர் சிரித்தபடி, என் வாழ்க்கையில் நான் செய்யாததை செய்யுமாறு தயவு செய்து கேட்காதீர்கள் என்றார். என்ன நடந்தாலும் ஓகே என்றார் என பதிவிட்டிருந்தார் .

இந்த ட்வீட்டை பார்த்த மகள் ரயன் மிதுன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா. நானும், என் குழந்தைகளும் உங்களை பார்த்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் உங்களை பற்றி அவர்களிடம் கூறுவேன் என பதிவிட்டிருந்தார் .

இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த ரயன் மிதுனுக்கு கடந்த மாதம் 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளார். தன் பாசத்திற்குரிய அம்மாவின் பெயரை லைட்டா மாற்றி மகளுக்கு ராத்யா என்று பெயர் வைத்திருக்கிறார் ரயன்.