டில்லி ஜுமா மசூதியை இடியுங்கள்….. ! பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சு

டில்லி:

லைநகரில் உள்ள ஜுமா மசூதியை இடித்து தள்ளுங்கள்.. அங்கு இந்துக் கடவுள்களின்  விக்கிரகங் கள் இல்லையெனில் என்னை தூக்கிலிடுங்கள் என்று சர்ச்சை புகழ்  பாஜக எம்.பி சாக்‌ஷி மகராஜ் ஆவேசமாக கூறி உள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பதவி ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் சிறுபாண்மை யினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மாட்டுக்கறி சர்ச்சை காரண மாக உன்னாவ் தொகுதியில் கடுமையான பிரச்சினைகளை ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும்  உன்னாவ் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ்  சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாக்ஷி மகாராஜ்,  டில்லியில் உள்ள ஜமா மசூதியை இடித்தால், அதன் மாடிப்படியின் கீழ் இந்துக் கடவுள்களின் சிலை இருக்கும் என்றார்.  மேலும் இடித்துப் பார்த்து அங்கு சிலைகள் இல்லையெனில் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று ஆவேசமாக கூறினார்.

மேலும்,  நான் அரசியலில் நுழைந்தபோது நான் மதுராவில் என் முதல் அறிக்கையை வெளி யிட்டேன். அதில், அயோத்தி, காசி, மதுராவை விட்டு விடுவோம், டில்லியில் உள்ள ஜுமா மசூதியை இடியுங்கள் மாடிப்படியின் கீழ் விக்கிரகங்கள் இல்லையெனில் என்னைத் தூக்கிலிடுங்கள் என்று கூறியிருந்தேன்,  அந்த நிலைப்பாட்டில் தான் இன்னும் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

முகலாயர்கள் இந்துக்கோயில்கள் பலவற்றை அழித்து நாடு முழுதும் சுமார் 3000 மசூதிகளை கட்டினர் என்றும் குற்றம் சாட்டினார். அவரது பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய . மற்றொரு பாஜக எம்.பி. ரவீந்திர குஷ்வாஹா, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோயில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் ராஜ்யசபாவில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டு வருவோம் என்றும் கூறி உள்ளார்.

பாஜக எம்.பி.க்களின் சர்ச்சை பேச்சு மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.