பொதுமக்களும் நிறுவனங்களூம் கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி

ற்போது நிலுவையில் உள்ள கடன்களைப் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் புதுப்பிப்பதற்காக ரிசர்வ் வங்கி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

 

இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது.   கடந்த மார்ச் 25 முதல் உள்ள ஊரடங்கால் பொருளாதாரம் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் பல நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ளனர்.

ரிசர்வ் வங்கி கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் நிலுவையில் உள்ள தங்கள் கடன்களைப் புதுப்பிக்கத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

ரிச்ர்வ் வங்கி ஏற்கனவே கடனைக் கால தாமதமாக செலுத்த அறிவித்திருந்த காலக்கெடு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால் இந்த திட்டம் அறிவிக்கபடுள்ளது.  இந்த திட்டத்தை செயல்படுத்த வச்தியாக திவால் மற்றும் நொடித்துப்போவதை அறிவிக்கும் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.  இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் முன்பிருந்தே கடனை செலுத்தாமல் உள்ளவர்களுக்குப் பொருந்தாது.