வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பல்ல : ரிசர்வ் வங்கி

டில்லி

ங்கியின் லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் திருட்டுப்போனாலோ, அல்லது கொள்ளையடிக்கப்பட்டாலோ வங்கிகள் பொறுப்பேற்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கறிஞர் கேட்ட கேள்விக்கு இந்த அதிர்ச்சியூட்டும் பதிலை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.

அந்த தகவலில் குறிப்பிட்டுள்ளதாவது :

வங்கி லாக்கர்கள் என்பது வாடகைக்கு விடப்படுவதாகும்.  ஒரு வீடு வாடகைக்கு விடப்பட்டால் அதில் உள்ள பொருட்களுக்கு வீட்டு சொந்தக்காரர் பொறுப்பு எடுத்துக் கொள்ள மாட்டார்.  அது போலத்தான் இதுவும்.

வங்கி லாக்கர்களில் என்னென்ன பொருட்கள் உள்ளன, அவைகளின் மதிப்பு எவ்வளவு என எந்த ஒரு விவரமும் வங்கிகளீடம் அளிப்பதில்லை.  வங்கிகளும் கேட்பதும் இல்லை.   அதனால் இழப்பை வங்கிகளால் எந்நாளும் மதிப்பிட முடியாது.

வங்கிகள் இதனை வாடிக்கையாளர்களிடம் லாக்கரை வாடகைக்கு அளிக்கும் ஒப்பந்தத்திலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளது.    தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டும், இயற்கை சீற்றம், சமூக மற்றும் போரினால் ஏற்படும் போராட்டங்கள், திருட்டு, கொள்ளை போன்றவற்றால் உண்டாகும் எந்த நஷ்டத்துக்கும் வங்கி நிர்வாகம் பொறுப்பேற்காது என கூறப்பட்டுள்ளது.

எனவே இதனை மனதில் கொண்டு வாடிக்கையாளர்கள், தங்களின் லாக்கர்களில் உள்ள உடமைகளை இன்ஷ்யூர் செய்துக் கொள்வதே சரியான வழி.

இவ்வாறு அந்த அறிக்கையில் உள்ளது