டில்லி:

ந்திய  ரிசர்வ் வங்கியின் தலைமை நிதித்துறை அதிகாரியாக, சுதா பாலகிருஷ்ணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

பிரபல ஆடிட்டதான சுதா பாலகிருஷ்ணன்,  தற்போது தேசிய செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி (National Securities Depository Limited (NSDL)  நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். இவரை ரிசர்வ் வங்கியின் நிதித்துறை அதிகாரியாக மத்திய அரசு நியமித்து உள்ளது.  ரிசர்வ் வங்கியின் 22வது அதிகாரியும், முதன் பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15ந்தேதிமுதல் 3 ஆண்டு களுக்கு இவர் பதவியில் இருப்பார்.

இவர் வங்கியின் கணக்குகளுக்கான விதிகள் மற்றும்  ரிசர்வ் வங்கியின் நிதித்துறை செயல்பாடு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ரிசர்வ் வங்கி செய்யும் முதலீடுகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.