டில்லி

ங்கிகள் இனி எல் ஓ யு என அழைக்கப்படும் கடன் உத்திரவாதக் கடிதம் அளிக்க ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.

பிரபல தொழில் அதிபர் நிரவ் மோடி மற்றும் அவர் கூட்டாளி மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சான் நேஷனல் வங்கியில் இருந்து கடன் உத்திரவாத கடிதம் பெற்று அதன் மூலம் ரூ.13 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக புகார் வந்தது.   அதையொட்டி சிபிஐ நடவடிக்கை எடுக்கும் போது இருவரும் குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர்.   அத்துடன் பரோடா வங்கியிலும் இதே போல வேறு இரு தொழில் அதிபர்கள் ரூ 6000 கோடி மோசடி செய்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

இந்த கடன் உத்திரவாதக் கடிதம் மூலம் வங்கிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது.   அதே வேளையில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்களிடம் இருந்து இந்த தொகையை பெறுவதும் கடினமாக உள்ளது.    அதை ஒட்டி ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “இறக்குமதி கடனுக்காக எல் ஓ யு மற்றும் எல் ஓ சி என்னும் கடன் உத்திரவாதக் கடிதங்களை இனி வழங்கக்கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   உடனடியாக அமுலுக்கு வரும் இத்தடையை ஒட்டி இந்த கடிதங்களை பயன்பாட்டில் இருந்து ரிசர்வ் வங்கி நீக்குகிறது.   அதே நேரத்தில் லெட்டர் ஆஃப் கிரெடிட் மற்றும் வங்கி உத்திரவாதம் ஆகிய நடைமுறைகள் தொடரும்”  என குறிப்பிடப் பட்டுள்ளது.