ரிசர்வ் பேங்க் டிராவிட் போல் செயல்பட வேண்டும்.. சித்து போல் அதிரடி கூடாது!:  ரகுராம் ராஜன்  

த்திய அரசுக்கும் மத்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில்  ரிசர்வ் பேங்க் இந்திய கிரிக்கெட் வீர்ர் ராகுல் திராவிட் போல் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும், நவ்ஜோத் சித்து போல் அதிரடியாக ஆடக்கூடாது என்று ரிசர்வ் வங்கி முன்னாள்  ஆளுநர்  ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த ரகுராம் ராஜன், “மத்திய அரசு – ரிசர்வ் வங்கி.. இருதரப்பினரும் ஒருவரையொருவர் முதலில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மற்றவரின்  நிலைப்பாடுகள் கொள்கைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த ரிசர்வ் வங்கி – மத்திய அரசு சு விவகாரத்தில் ரிசர்வ் வங்கி போர்டின் செயல்பாடுதான் கவலையளிப்பதாக இருக்கிறது.  ரிசர்வ் வங்கி போர்டில் தொழில்பூர்வமான கண்காணிப்பாளர்களோ மத்திய வங்கி அதிகாரிகளோ இடம்பெறவில்லை. இதில் இருப்பவர்கள் சமூகத்தில் பல்வேறு நிலைகளிலிருந்து வருபவர்கள் இவர்கள் அறிவுரை அளிப்பவர்கள். இவர்கள் ராகுல் திராவிட் போல், ஒரு பயிற்சியாளர் போல் நிதானமாக நம்பிக்கை அளிப்பவர்களாக செயல்பட வேண்டும். ஆனால் நவ்ஜோத் சிங் சித்து போல் உரக்கப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அதிரடியாக ஆடக்கூடாது.

ரிசர்வ் பேங்க் போர்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக்குக் கவலையளிக்கிறது. இவர்கள் நல்லவர்கள், வித்தியாசங்களை களைய வேண்டுமே தவிர மேலும் மேலும் வேறுபாடுகளை வளர்ப்பவர்களாக இருக்கக் கூடாது. இந்த போர்டில் இன்னும் சில சிறந்த நபர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் நிச்சயம் அரசு- ரிசர்வ் வங்கி இடையேயான கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சி செய்ய  வேண்டும், தற்போது எழுந்துள்ள சப்தங்களைக் குறைக்க வேண்டும். மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடனான உறவுகளை சீர்படுத்துவதில் உரையாடலில் எப்போதும் சுணக்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது என் கருத்து” என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.