Random image

வீடியோகோன்- ஐசிஐசிஐ வங்கி வழக்கு : ரிசர்வ் வங்கியின் மவுனம்

மும்பை

வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த ஐசிஐசிஐ வங்கிக்கு சான்றிதழ் அளிக்காமல் ரிசர்வ் வங்கி இழுக்கடித்துக் கொண்டு உள்ளது.

தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் கடன் வாங்கிய வீடியோகோன் நிறுவனம் அதை திருப்பித் தரவில்லை.   அது குறித்து எழுந்த வழக்கில் அந்த வங்கியின் உயர் அதிகாரி சந்திரா கோச்சரின் கணவருக்கு வீடியோகோனின் துணை நிறுவனம் ஒன்று மலிவு விலைக்கு விற்கப்பட்டு அதற்கு பதிலாக கடன் பெறப்பட்டதாக தெரிய வந்தது.

அது குறித்து வங்கி நிர்வாகம் சந்திரா கோச்சார் மீது தனி நபர் விசாரணை ஒன்றை அமைத்து விசாரித்து வருகிறது.   அதை ஒட்டி சந்திரா கோச்சார் நீண்ட விடுப்பில் உள்ளார்.   இந்நிலையில் சந்திரா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனமான ஐசிஐசிஐ நிதி நிறுவனத்தில் பணி புரிய விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதை ஒட்டி ரிசர்வ் வங்கி ஐசிஐசிஐ வங்கிக்கு விசாரணை முடிந்து நன்னடத்தை சான்றிதழ் கொடுத்துள்ளதா என்னும் கேள்வி எழுந்தது.   இந்த விவரத்தை அறிய பிரபல நாளேடான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் ஒன்றை அளித்தது.  அந்த விண்ணப்பத்துக்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில், “ஐசிஐசிஐ வங்கியில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்னும் புகாரின் அடிப்படையில் தனியார் விசாரணை நடந்து வருகிறது.    அந்த விசாரணை இன்னும் முழுமை அடையவில்லை.  அதனால் இந்நிலையில் ரிசர்வ் வங்கி இது குறித்து எந்த ஒரு பதிலும் தர இயலாத நிலையில் உள்ளது.    இப்போது இது குறித்த விவரங்களை அளித்தால் அது விசாரணையின் போக்கில் விளைவுகளை உண்டாக்கும் என அச்சத்தில் ரிசர்வ் வங்கி உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.