டில்லி:

நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில், ஆர்ஜிடிஎஸ் முறையில் பண பரிமாற்றம் செய்யும் நேரம் மேலும் ஒன்றரை மணி நேரம் நீட்டித்து ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பண பரிமாற்றம் செய்யலாம் என்று தெரிவித்து உள்ளது.

இந்த புதிய நடைமுறை ஜூன் 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், தெரிவித்து உள்ளது.

ஆர்ஜிடிஎஸ் முறையில் ரூ.2 லட்சம் வரை பணி பரிமாற்றம் செய்யலாம். தற்போது ஆர்டிஜிஎஸ் ( RTGS) முறையில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பணம் அனுப்பும் நடைமுறை யில்   உள்ளது இதை  6 மணி வரை நீட்டித்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

மேலும் கடந்த ஏப்ரல் 2019ம்  வரை சுமார் 112 கோடி ரூபாய் ஆர்ஜிடிஎஸ் முறையில் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

மேலும், பிளாட் பிராசஸிங் கட்டணத்துடன் கூடுதலாக ஒவ்வொரு வெளிப்புற பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளரிடம் இருந்து ‘நேரத்தை மாறுபடும் கட்டணம்’ வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி காலை 8 மணி முதல்  11 மணி வரை எந்தவித கட்டணமும் இல்லாத நிலையில் தற்போது அது 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ரூ.2 என்றும், 1 மணி முதல் மாலை 6 மணி வரை ரூ. ஆகவும், மாலை 6மணிக்கு மேல் நடைபெறும் பணி பரிவர்த்தனைக்கு ரூ.10 ஆகவும் நிர்ணயித்துள்ளது.

வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்கான நேரம் மாலை 6 மணி என்றும், மேலும் வங்கிக் கடன்களுக்கான இறுதிக் கட்டணங்கள் செலுத்த இரவு  7:45 மணி வரையும் அனுமதித்துள்ளது. மேலும், . IDL தலைகீழ் 7:45 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.