ரிசர்வ் வங்கி ஆளுநர்  பதவியை ராஜினாமா ?

த்திய அரசுடன் கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தன் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

வது குறித்து பரிசீலிக்க கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் அண்மைக் காலமாக க  மோதல் போக்கு  நிலவுகிறது. ரிசர்வ் வங்கியின் 11 வங்கிகளுக்கான கடன் விதிகளை எளிதாக்குவதன் மூலம் சிறு குறு நிறுவனங்கள் மீதான அழுத்தம் ஓரளவிற்கு குறையும் என மத்திய அரசு தீர்மானித்துள்ளது.  ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஐஎல்எஃப்எஸ் தனியார் நிதி நிறுவனம் நிதிச் சிக்கலில் சிக்கியதை அடுத்து,  ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் கடுமையான நடவடிக்கை எடுத்தது.  இதனால், வங்கி சாராத (அரசுக்கு ஆதரவான) சில நிதி நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பணத்தை பெற முடியாத நிலையில் பிரச்சினையில் சிக்கியுள்ளன.

தவிர, வாராக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி எடுத்த சில நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அதிருப்தி கொண்டிருப்பதாக  கூறப்படுகிறது.

இதற்கிடையே தன்னாட்சி அமைப்பான ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு தன் விருப்பத்திற்கு நடக்க வேண்டி உத்தரவிடுவதாக கூறப்படுகிறது.

ஆனால் மத்திய அரசின் நெருக்கடிக்கு பணியாத ரிசர்வ் வங்கி மத்திய அரசை பல வகையில் குற்றம்சாட்டி வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடைபெற் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா,  ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மத்திய அரசு குலைக்க முயல்வதாக தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரம் பராமரிக்கப்பட வேண்டும். இதை செய்ய தவறினால் மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் வெளிப்படையாக குற்றம்சுமத்தினார்.

ஆனால் இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்திய அரசின் பொருளாதாரம் தொடர்ந்து சரிய ரிசர்வ் வங்கி தான் காரணம் என வெளிப்படையாக குற்றம்சுமத்தினார்.  “வங்கிகள் அளித்த கண்மூடித்தனமான கடன்களை ரிசர்வ் வங்கி கண்டுகொள்ளவில்லை.  சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு பின்னால் 2008-ஆம் வருடத்தில் இருந்து 2014 ஆம் வருடம் வரை வங்கிகள் எந்த அடிப்படையும் இல்லாமல் கண்மூடித்தனமாக கடன்கள் அளித்துள்ளன.  இப்படி கடன் வழங்கிய போது ரி சர்வ் வங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது” என்று சாடினார்.

இப்படி தொடர்ந்து  மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

பொருளாதார வல்லுனர்கள், “ரிசர்வ் வங்கியின் சட்டப்பிரிவு 7-ன் படி பொதுமக்கள் நலன் கருதி ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி அறிவுறைகள் வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இந்த அதிகாரம் இன்னும் பயன்படுத்தப்படவில்லை. மிகவும் இக்கட்டான சூழ்நிலையை இந்தியா எதிர்கொண்ட 1991 மற்றும் 2008-ஆம் வருடங்களில் கூட மத்திய அரசு இந்த அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் இப்போதைய பாஜக அரசு, ரிசர்வ் வங்கியை தனது கைப்பாவையாக்க முயல்கிறது” என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தன் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை.