ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ஆர் எஸ் எஸ் கடும் எச்சரிக்கை

டில்லி

ரசுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை எனில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகலாம் என ஆர் எஸ் எஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கிக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆச்சாரியா மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடுவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

அதன் விளைவாக நடைபெற உள்ள பாராளுமன்ற் தேர்தலை மனதில் கொண்டு மத்திய பாஜக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை மறுத்த மத்திய அரசு, தனது அறிக்கையில், “ரிசர்வ் வங்கியின் சுதந்திரத் தன்மை இன்றியமையாதது. அதை என்றும் அரசு மதிக்கும். அனைத்து முடிவுகளையும் ரிசர்வ் வங்கியை கலந்தோலோசித்த பிறகே அரசு எடுக்கும்” என தெரிவித்த்து.

இன்று பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் பொருளாதாரப் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரன் மஞ்ச் தலைவ்ர் அஸ்வினி மகாஜன் ஒரு பேட்டியில், “மத்திய அரசுடன் ஒத்துப் போய் பணி புரிவது ரிசர்வ் வங்கி ஆளுநரின் கடமை ஆகும். அவ்வாறு நடக்க முடியவில்லை எனில் அவர் பதவியை ராஜினாமா செய்யலாம்.

அத்துடன் தனது சக அதிகாரிகள் தங்க்ள் கருத்து வேறுபாடுகள் குறித்து மக்கள் மத்தியில் பேசுவதை ஆளுநர் தடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி ஆளுனருக்கு அரசுக்கு கீழ்ப்படிய விருப்பம் இல்லை என்றாலும் தனது சக அதிகாரிகளை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என்றாலும் அவர் ராஜினாமா செய்வதே நல்லது: என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.