ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டரில்,

“எனக்கு நடந்த சோதனையில் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

அறிகுறிகள் இல்லை.

நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தோரை சோதனை செய்துக் கொள்ளுமாறு எச்சரிக்கிறேன்.

தனிமையில் பணிகளைத் தொடர உள்ளேன்.

ரிசர்வ் வங்கி பணிகள் வழக்கம் போல் நடக்கும்.

 நான் அனைத்து துணை ஆளுநர் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி மற்றும் தொலைப்பேசி மூலம் தொடர்பில் உள்ளேன்”

எனப் பதிந்துள்ளார்.