பாராளுமன்ற நிலைக்குழு முன் ஆர்.பி.ஐ. கவர்னர் உர்ஜித் பட்டேல் ஆஜர்

டில்லி:

ந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், பணமதிப்பிழப்பு நடவடிக்கைள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் செயல் படாத சொத்துக்களின் நிலைமை குறித்து விளக்கவும் இன்று பாராளுமன்ற குழுவிற்கு முன் ஆஜரானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைமுறைப் படுத்தப்பட்ட பழைய ரூ. 500/1000 நோட்டு களின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ரிசர்வ் வங்கியிலுள்ள சீர்திருத்தங்கள், பொதுத்துறை வங்கிகளின் செயற்படாச் சொத்துக்கள், மற்றும் பொருளாதார நிலை குறித்தும் 31 பேர் கொண்ட நிதி தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு முன் விளக்கமளித்துள்ளார்.

நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில், கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து வருவதால், பொருளாதாரம் பயனளிக்கும் என்றும், அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம் வீரப்ப மொய்லி தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உறுப்பினராக உள்ளார்.

குழுவினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, 10 நாட்களில் பதில் அளிக்குமாறு உர்ஜித் பட்டேலுக்கு நிலைக்குழு சார்பில்  உத்தரவிடப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.