புதுடெல்லி: புதிதாக எந்த வங்கிக்கும் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உரிமம் (லைசன்ஸ்) வழங்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் லைசன்ஸ் பெற்ற வங்கிகள் முறையாக செயல்படுகின்றனவா? மற்றும் வளர்ச்சியடைந்துள்ளனவா? என்று கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி மேற்பார்வைக்கான வாரியத்தின் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்குள் லைசன்ஸ் பெற்ற வங்கிகள் சரியாக செயல்பட்டு வளர்ச்சியைக் காட்டியிருந்தால் மட்டுமே, தனது புதிய முடிவில் மாற்றத்தைக் கொண்டுவருவது குறித்து ரிசர்வ் வங்கி யோசிக்கும் என கூறப்படுகிறது.

ஏனெனில், புதிதாக லைசன்ஸ் பெற்ற வங்கிகளின் செயல்பாடு திருப்தி தருவதாக அமையவில்லை என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐடிஎஃப்சி மற்றும் பந்தன் வங்கி உள்ளிட்ட புதிதாக லைசன்ஸ் பெற்ற வங்கிகள், பெரியளவில் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.